புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அனுசரணையில், “வவுனியா புதிய கற்பகபுரம் அன்னை தெரசா முன்பள்ளி” திறனாய்வு போட்டி 2017..! (படங்கள்)

0
37

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அனுசரணையில், “வவுனியா புதிய கற்பகபுரம் அன்னை தெரசா முன்பள்ளி” திறனாய்வு போட்டி 2017..! (படங்கள்)

அமரர்களான சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் திரு.சொ.கருணலிங்கம், இளைய மருமகளான திருமதி.யோகலிங்கம் (பாபு) மீரா, பேத்தியான செல்வி மேகலா சஸ்பாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா புதிய கற்பகபுரம் அன்னை தெரசா முன்பள்ளி திறனாய்வு போட்டி 2017க்கு “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” ஊடாக அனுசரணை வழங்கினர்.

வவுனியா புதிய கற்பகபுரம் அன்னை தெரசா முன்பள்ளி திறனாய்வு போட்டி 10.04.2017 அன்று முன்பள்ளி ஆசிரியை திருமதி வசந்தி தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியது..

பிரதம விருந்தினராக ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவரும், புதிய கற்பகபுரம் கிராமத்தின் ஸ்தாபகருமான திரு.ப.உதயராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அழைப்பாளராக முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.தர்மபாலன் அவர்களும், பனை தென்னைவள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.மோகனா அவர்களும் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக பூவரசங்குளம் முன்பள்ளி கட்டமைப்பு தலைவர் திரு.விஜயகுமார் அவர்களும், பம்பைமடு கிராம சேவையாளர் திருமதி.தர்சிகா அவர்களும், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், ஆலயபரிபாலன சபையினர் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மிக நேர்த்தியான முறையில் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டியில் விருந்தினர் மாலையிட்டு வரவேற்கபட்ட பின்னர், மங்கள விளக்கேற்றலுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

சிறார்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்வுகள், இடம்பெற்றதுடன், இசையும், அசைவும், வினோதஉடை போட்டி, பெற்றோர் நிகழ்வுகள், உத்தியோகத்தர் நிகழ்வுகள், பழைய மாணவர் நிகழ்வுகள் இடம் பெற்றதும் சிறப்பம்சமாகும்.

நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீடெலோ கட்சியின் தலைவரும், புதிய கற்பகபுரம் கிராமத்தின் ஸ்தாபகருமான திரு.ப. உதயராசா அவர்கள்.. “புதிய கற்பகபுரம் கிராமம் தற்போது தான் வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும், மிகவும் அடிப்படை வசதிகள் இல்லாது இயங்கும் இந்த முன்பள்ளிக்கு ஒரு நிரந்தர கட்டிடம் அமைக்கபட வேண்டும் எனவும் இப்படியான முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் உறவுகளின் கடமை எனவும், அந்த வகையில் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்துக்கு” எனது நன்றிகளும், அமரர்களான சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் திரு.சொ.கருணலிங்கம், இளைய மருமகளான திருமதி.யோகலிங்கம் (பாபு) மீரா, பேத்தியான செல்வி மேகலா சஸ்பாநிதி ஆகியோருக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களும்” என்றார்.

பின்னர் பரிசளிப்பு இடம் பெற்றது.

பங்குபற்றிய அனைத்து முன்பள்ளி சிறார்களுக்கு “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” ஏற்பாட்டில், வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த விளையாட்டு நிகழ்வுக்கு தாய்மடி நற்பணி மன்றமும் இணை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here