Breaking News
Home / செய்திகள் / புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” நடாத்தவுள்ள, அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமான “உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி” குறித்த அறிவித்தல்..!

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” நடாத்தவுள்ள, அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமான “உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி” குறித்த அறிவித்தல்..!

002aa
புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” நடாத்தவுள்ள, அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமான “உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி” குறித்த அறிவித்தல்..!

புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம் நேற்றையதினம் (19.02.2017) நடைபெற்றது நீங்கள் அறிந்ததே..

இதன் நிர்வாகக் குழுவானது, நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் கூட்டப்பட்டது.

மேற்படி “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கருத்துப் பரிமாறல்கள் மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து எதிர்வரும் பங்குனி (மார்ச்) மாதம் 18ஆம் 19ஆம் திகதிகளில் “புங்குடுதீவின் அனைத்து விளையாட்டுக் கழகங்களில்” இருந்தும், இருபத்தைந்து வயதுக்குட்பட்டவர்களை இணைத்த உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி விளையாட்டுப் போட்டியில் அனைத்து விளையாட்டுக் கழகங்களில் இருந்தும் கலந்து கொள்வோர் “இருபத்தைந்து (25) வயதுக்கு உட்பட்டவர்களாகவே” இருக்க வேண்டுமெனவும், மேற்படி விளையாட்டுப் போட்டியை கரந்தலி அன்னை வேளாங்கன்னி மைதானத்தில் நடாத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

முன்னைய அறிவித்தலின்படி, “புங்குடுதீவின் அனைத்து விளையாட்டுக் கழகங்களில்” இருந்தும், இருபது வயதுக்குட்பட்டவர்களை இணைத்த உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியை நடாத்துவதென அறிவித்து இருந்தோம். ஆயினும் புங்குடுதீவின் விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, “புங்குடுதீவின் அனைத்து விளையாட்டுக் கழகங்களில்” இருந்தும், இருபத்தைந்து வயதுக்குட்பட்டவர்களை இணைத்த உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியை நடாத்துவதென தற்போது தீர்மானிக்கப் பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் மகிழ்வுடன் அறிய தருகிறோம்.

மேலும், முதல்நாளான மார்ச் 18ஆம் திகதி அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமான உதைபந்தாட்டப் போட்டியினை நடாத்துவதோடு மறுதினமான மார்ச் 19ஆம் திகதி உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியையும் மற்றும் தாயகம் அமைப்பினால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் (கயிறு இழுத்தல், பனிஸ் சாப்பிடுதல், கிடுகு பின்னுதல், பனையோலைக் கைப்பணிப் போட்டி) என்பவற்றை நடத்துவதென்றும், மேற்படி விளையாட்டுப் போட்டியின் இறுதியின் இறுதியில் முதல்நாள் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியினை நடாத்துவதோடு, அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி மார்ச் 19ஆம் திகதி நடைபெறும் நிகழ்வில், பிரதம விருந்தினராக வட மாகாணசபை ஆளுநரின் செயலாளர் திரு. இலட்சுமணன் இளங்கோவன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் திரு. விந்தன் கனகரத்தினம், திரு. பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் (சமூக ஆர்வலர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நன்றி.

இவ்வண்ணம்..
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
“தாயகம் சமூக சேவை அகம்”
புங்குடுதீவு -12.

**** தொடர்புபட்ட செய்திக்கு…..
http://www.athirady.com/tamil-news/infomation/958262.html

About raj

Check Also

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *