Breaking News
Home / செய்திகள் / புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட, நாகேஸ்வரன் ஆலய சிவராத்திரி விழா… (வீடியோ & படங்கள்)

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட, நாகேஸ்வரன் ஆலய சிவராத்திரி விழா… (வீடியோ & படங்கள்)

001
புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட, நாகேஸ்வரன் ஆலய சிவராத்திரி விழா… (வீடியோ & படங்கள்)

புங்குடுதீவு வீராமலை, கோரியாவடி பகுதியில் அமைந்துள்ள “நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரன்” ஆலயத்தில் இன்றுமாலை ஆரம்பித்த “சிவராத்திரி விழா” மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்படி சிவராத்திரி விழாவில் புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு நடன நிகழ்வுகளும் நடைபெற்றது.

மேற்படி நடன ஒழுங்கினை புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் தலைவி திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் (சிலோ) அவர்கள் மேற்கொள்ள, நடனத்துக்கான நெறிப்படுத்தலை “தாயகம்” அமைப்பின் உபசெயலாளர் செல்வி றோசஸ் புஷ்படொமின்ரில்டா (காஞ்சனா) வழங்கி இருந்தார்.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள், பெருமளவிலான பொதுமக்களும் “மேற்படி நடன நிகழ்வை வெகுவாகப் பாராட்டியதுடன், ஆலய நிர்வாகசபை சார்பாக, நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் “நடனத்துக்கு பாவிக்கும் கால்சலங்கை” போன்ற பொருட்க்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

சற்றுமுன்னர் மேற்படி நிகழ்வை நிறைவு செய்து கொண்டு, புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் “பெருங்காடு சிவன் கோயிலில்” நடைபெறும் “சிவராத்திரி விழாவில்” நடன நிகழ்வு நடத்துவதுக்கு சென்று கொண்டு உள்ளனர். (அதுகுறித்த செய்திகளும், படங்களும் காலையில் அனுப்பி வைக்கப்படும்)

தகவல் & படங்கள்..
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
“தாயகம் சமூக சேவை அகம்”
புங்குடுதீவு -12.

 

About raj

Check Also

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *