Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு)

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு)

050
உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மக்கள் உட்பட, உலகெங்கும் வாழும் மக்களே!
புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” ஆகிய இவ் அமைப்பு இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய ” பொதுநல” அமைப்பாக பதியப்பட்டு, அதற்கான வங்கிக் கணக்கையும் திறந்து, தனக்கான பொதுநலச் சேவைக்கு பலமான ஒரு அஸ்திவாரத்தை இட்டுள்ளது என்பதை மகிழ்வுடனும், பெருமையுடனும் எம்மக்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்பான எம்மக்களே!
புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்களான சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளினால், 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” எனும் இலவசக் கல்வி நிலையத்தின் செயற்பாட்டினைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு “தாயகம் சமூக சேவை அகமாக” பரிமாற்றம் செய்யப்பட்டு, “தாயகம் இலவசக் கல்வி நிலையம், தாயகம் பொது நூலகம், தாயகம் விளையாட்டுக் கழகம்” என பல பரிணாம வளர்ச்சியுடன் செயல்பட்டு வந்த “தாயகம் சமூக சேவை அகமானது” கடந்த மாதம் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டதுடன், அதுக்கென வங்கிக் கணக்கையும் ஆரம்பித்து உள்ளோம்.

மேற்படி “தாயகம் சமூக சேவை அகமானது” அமரர்களான சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் மற்றும் அவர்களது மகன்களில் ஒருவரான சுவிஸ்ரஞ்சனின் தனிப்பட்ட நண்பர்களின் பங்களிப்பில் செயல்பட்டு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கடந்த காலங்களில் புங்குடுதீவில் மட்டுமல்லாது வவுனியா முல்லைத்த்தீவு, கிளிநொச்சி உட்பட வன்னிப் பிரதேசங்களிலும் பல சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தோம். அது மட்டுமல்லாது, அண்மையில் தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாதிப்புக்கான நிவாரண உதவி நடவடிக்கையையும் நாம் மேற்கொண்டு இருந்தோம்.

இதேபோல் எதிர்காலத்திலும் எமது சமூக சேவை நடவடிக்கைகள், இன, மத, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, தொடர்ந்தும் செயற்படுத்தப்படும்.

“புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” பதிவிலக்கம்:
“Pungudutivu THAYAGAM Samooga Sevai Agam” Registered Number:

**** J/V/VOP/2017/04 ****

“தாயகம்” வங்கிக் கணக்கிலக்க விபரம்..

“புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்”
“Pungudutivu THAYAGAM Samooga Sevai Agam”
Account Number, வங்கி கணக்கு:..- 81080486
இலங்கை வங்கி Bank Of Ceylon
வேலணை பிரிவு Velanai Branch

***தொடர்புகளுக்கு***

**தபால் மூலம்:..
“தாயகம் சமூக சேவை அகம்”,
திருமதி.த.சுலோசனாம்பிகை (தலைவி)
பன்னிரெண்டாம் வட்டாரம்,
புங்குடுதீவு.

**மின்னஞ்சல்:
thayagam.pungudutivu@gmail.com
swissranjan@gmail.com

**முகநூல் தொடர்புகளிற்கு: https://www.facebook.com/thayagam.org/

**இணையத்தளம் : http://www.thayagam.org/

**தொலைபேசி தொடர்புகளுக்கு :
திருமதி.த.சுலோசனாம்பிகை (புங்குடுதீவு) -0094771772852
திரு.சுவிஸ்ரஞ்சன் (சுவிஸ்) -0041779485214

*** புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” நிர்வாகத்தினரின் விபரம்:..**

போசகர் – திரு. எஸ்.கே சண்முகலிங்கம் (சமூக சேவகர், முன்னாள் அதிபர்)

தலைவர் – திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை (சமூக சேவகர்)

செயலாளர் – செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு (சமூக ஆர்வலர் -ஏழாலை)

பொருளாளர் – செல்வி றோசஸ் புஷ்படொமின்ரில்டா (காஞ்சனா)

உப தலைவர் – செல்வி சேனாதிராசா சாந்தினி

உப செயலாளர் – திருமதி யோகநாதன் மரிஸ்ரெலா

*** நிர்வாக சபை உறுப்பினர்களாக:-..
செல்வி. மேரிஆன் மரியதாஸ் (கயானி)
செல்வன். நடராசா நவநேசன்
செல்வி. மதுமிதா வேதநாயகம்
செல்வி. அனுஷா சந்திரபாலன்
செல்வன். சன்சியோன் அன்ரன் தாவீது
செல்வன். ஜான்றோசன் அருள்தாஸ் ஆகியோரும்,

எண் பார்வையாளராக (கணக்குப் பரிசோதகர்)..-
திருமதி குகநேசன் மஞ்சுளா அவர்களும்,

பிரதம ஆலோசகராக..-
புங்குடுதீவின் மண்ணின் மைந்தரான திரு. இலட்சுமணன் இளங்கோவன் (சமூக சேவகர், வட மாகாணசபை ஆளுநரின் செயலாளர்) அவர்களும்,

ஆலோசகர்களாக..-
திரு. கணபதிப்பிள்ளை வாகீசன் (கிராம சேவகர்)
திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் (லண்டன்),
திருமதி.விஜயகுமாரி (ரோகிணி) பரமகுமரன்(லண்டன்),
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்)

“ஊருக்கு சேவையாற்ற ஒன்றுபடுவோம், ஒன்றுபட்டு ஊருக்கு சேவையாற்றுவோம்”

“ஏரும், எழுத்தும்.. பாரை உயர்த்தும்”..!!

நன்றி..

இவ்வண்ணம்…
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
“தாயகம் சமூக சேவை அகம்”
புங்குடுதீவு -12

16.08.2017

About raj

Check Also

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *