Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

002
புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் பல பகுதிகளில் நடைபெற்ற “வாணி விழா” நிகழ்வுகளின் போது, புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின், சொக்கலிங்கம் அக்கெடமி மாணவிகளின் நடன நிகழ்வுகள் நடைபெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்று உள்ளனர்.

புங்குடுதீவு கலைப்பெருமன்றம் சார்பில், புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு, புங்குடுதீவு ஸ்ரீ கணேஷ மகா வித்தியாலயம், புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, புங்குடுதீவு சர்வோதயம் ஆகிய இடங்களில் நடைபெற்ற “வாணி விழா” கொண்டாட்டங்களின் போது, மேற்படி தாயகம் அமைப்பின் மாணவிகளின் சிறப்பு நடனங்கள் நடைபெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்று உள்ளனர்.

ஒரேநாளில் நான்கு இடங்களில், நடன நிகழ்வு நடைபெற்ற போதிலும் ஒவ்வொரு இடத்திலும் வேறுவேறு விதமான உடைகளுடன், வேறுவேறு விதமான நடனங்களை மாணவிகள் வழங்கி இருந்தனர்.

இதற்காக முன்னின்று உழைத்த “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின்” தலைவி திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன் அவர்களுக்கும், “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின்” பொருளாளரும், நடன ஆசிரியையுமான செல்வி. றோசஸ் புஷ்படொமின்ரில்டா (காஞ்சனா) அவர்களுக்கும் எமது நன்றி.

தகவல் & படங்கள்… செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு (செயலாளர், “தாயகம்” -புங்குடுதீவு)

 

About raj

Check Also

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு)

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு) புங்குடுதீவு மக்கள் உட்பட, உலகெங்கும் வாழும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *