Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஆரம்பமாகியது, யா.புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையத்தின், மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015

ஆரம்பமாகியது, யா.புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையத்தின், மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015

socka.new-006
யாழ். புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையம் நடாத்தும்; மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015 இன் ஆரம்ப போட்டி நிகழ்வானது இன்றையதினம் (07.04.2015) காலை 9.30மணியளவில் அம்பலவாணர் விளையாட்டரங்கில் “தாயகம்” நிறுவன போசகர் திருமதி தனபாலன் சுலோசனா அவர்களது தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. மேற்படி போட்டி நிகழ்வுகள் நாளையதினமும் (08.04.2015) இடம்பெற்று இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வும் நாளை மறுதினம் 09.04.2015 அன்று நடைபெறவுள்ளன.

இந்நிகழ்விற்கு 09.04.2015 அன்று பிரதம விருந்தினராக திருமதி. சதீசன் மஞ்சுளாதேவி (பிரதேச செயலர், வேலணை பிரதேச செயலகம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் (ஜே.பி, புங்குடுதீவு, மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்), செல்வி பொ.ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி முத்துக்குமாரு ஜெகநந்தினி (ஆசிரியர், யா. புங்குடுதீவு றோ.க.த.க.வித்தியாலயம்), திரு. எஸ் சிவா (கிராம உத்தியோகத்தர், புங்குடுதீவு ஜே.26), திரு. வ.அபராஜ் (பொது சுகாதார பரிசோதகர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக செல்வி ஜனகா (கிராம உத்தியோகத்தர், புங்குடுதீவு ஜே.25), திரு. நாகராசா (அதிபர், யா. புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாலயம்), செல்வி எஸ்.ஏ. செல்வவதனா (புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய செயலாளர்), திரு. கிருபா (நலன்விரும்பி, சுவிஸ்), திரு. கணேசன் ஆனந்தன் (நலன்விரும்பி, கனடா), திரு. வை.இராஜேஸ்வரன் (நலன்விரும்பி, கனடா), திரு. எஸ்சாந்தகுமார் (நேசன் புடவை அகம்) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இறுதிநாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று, இறைவணக்கம், கொடியேற்றம், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்று இறுதிப்போட்டி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளும் இடம்பெற்று பரிசில்களும் வழங்கி வைக்கப்படும்.

மேற்படி விளையாட்டுப் போட்டிக்கான நிதிப்பங்களிப்பானது அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வன் யோகலிங்கம் (பாபு), மீரா தம்பதிகளின் செல்வப் புதல்வி “தேனு” அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவர்களினால் செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தகவல்…
திருமதி. த.சுலோசனாம்பிகை
“தாயகம்” நிறுவன போசகர்,
புங்குடுதீவு.

013a

013b

013aa

013d

013e

 

About raj

Check Also

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *