Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களின் பங்களிப்பை, இங்குள்ளோர் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.. -புங்குடுதீவில் நேற்று நடைபெற்ற விழாவில், எஸ்.கே.சண்முகலிங்கம்.

வெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களின் பங்களிப்பை, இங்குள்ளோர் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.. -புங்குடுதீவில் நேற்று நடைபெற்ற விழாவில், எஸ்.கே.சண்முகலிங்கம்.

sock.sport-76யாழ். புங்குடுதீவு “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையம் நடாத்திய “மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2015 நிகழ்வின்” இறுதிநாள் நிகழ்வானது நேற்றையதினம் (09.04.2015) காலை 9.30மணியளவில் புங்குடுதீவு அம்பலவாணர் விளையாட்டரங்கில் “தாயகம்” நிறுவன போசகர் திருமதி தனபாலன் சுலோசனா அவர்களது தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. எஸ்..கே.சண்முகலிங்கம் அவர்கள் தனதுரையில்,

sock.sport-05
“தாயகம்” அமைப்பினர் மாத்திரமல்லாது புலம்பெயர் நாடுகளிலுள்ள புங்குடுதீவு மக்கள், இங்குள்ள மாணவர்களின் கல்விக்காகவும், புங்குடுதீவின் அபிவிருத்திக்காகவும் பல்வேறு உதவிகளை செய்வதற்கு எப்போதுமே தயாராகவே உள்ளார்கள். அதனைப் பெற்று அதனை உரிய முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்காகவும் புங்குடுதீவின் அபிவிருத்திக்காகவும் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு திட்டத்தினையும் நல்ல முறையில் நீங்கள் பயன்படுத்தினால் மாத்திரமே அவர்களும் தொடர்ந்து முழுமனதுடன் உதவிகளைச் செய்ய முன்வருவார்கள்.

“தாயகம்” அமைப்பைச் சேர்ந்தோர் லண்டன், கனடா, பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகளில் உள்ள புங்குடுதீவு ஒன்றியங்களில் பொறுப்பில் உள்ளார்கள், ஆகவே அவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள் மூலம், புங்குடுதீவில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், புங்குடுதீவின் அபிவிருத்திக்கும் உதவ முடியும், உதவுவார்கள் என்று நம்புகிறேன், அதேவேளை இங்குள்ளோரும், குறிப்பாக பெற்றோர்கள், அதனை சரியான முறையில் பயன்படுத்தி, மாணவ செல்வங்கள் வெற்றியடைய பாடுபட வேண்டும்,

மற்றவர்கள் உதவுவதுக்கு, நீங்கள் செய்யும் கைமாறு, கல்வியில் சிறந்து விளங்குவதே. இதனைக் கருத்திற் கொண்டு இங்குள்ள மாணவ, மாணவிகள் மிகவும் அக்கறையுடன் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், புங்குடுதீவின் அபிவிருத்திக்காவும், புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் மாத்திரமல்லாது புங்குடுதீவு ஒன்றியங்கள் தொடர்ந்தும் உதவி புரிவார்கள் என நான் முழுமையாக நம்புகின்றேன்” எனக் குறிப்பிட்டார்.

sock.sport-121
மேற்படி “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையம் நடாத்திய மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் தலைமையுரை ஆற்றிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்கள் தனதுரையில்,

நாம் “தாயகம்- சமூக வளர்ச்சி அகம்”… சார்பில் “தாயகம்” சொக்கலிங்கம் கல்வி நிலையத்தை ஆரம்பித்து, எம்மால் முடிந்தவரை சிறப்பாக நடாத்தி வருகிறோம். மிகவிரைவில் “தாயகம்” அறநெறிப் பாடசாலை, “தாயகம்” பொது நூலகம் போன்றவற்றை ஆரம்பிக்க உள்ளோம். மேற்படி பொது நூலகத்தை ஆரம்பிக்க உதவி புரியவுள்ள திரு.திருமதி அருள்நாதன் பாலசுவர்ணா குடும்பத்துக்கும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்துக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அதேபோல் நாம் ஆரம்பிக்க எண்ணியுள்ள, “தாயகம்” சிறுவர் பூங்கா, “தாயகம்” விளையாட்டுக் கழகம், “தாயகம்” குடிநீர் சேவை, “தாயகம்” சுகாதார சேவை மையம், “தாயகம்” பொது சேவை மையம் போன்ற பல்வேறு விடயங்களுக்கு புலம்பெயர் புங்குடுதீவு மக்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒன்றியங்களும் எமக்கு உறுதுணை புரிய வேண்டும்.

நாம் இம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும், புங்குடுதீவின் அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்டு எம்மால் முடிந்தளவுக்கு பணியாற்ற தயாராகவே இருக்கின்றோம். அதேவேளை வெளிநாடுகளில் இருந்து உதவிகளைச் செய்து வருகின்ற புங்குடுதீவு மக்களின் உதவிகளை இங்கிருப்பவர்கள் உரியமுறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

sock.sport-120
அடுத்து கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த யா. புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் திரு.ம.கணேசன் அவர்கள் உரையாற்றும் போது, தாயகம் கல்வி நிலையமானது மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. அது வீறுகொண்டு இந்த விளையாட்டுப் போட்டியினை திறம்பட நடாத்தியதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் இவ்வளவு மாணவ, மாணவிகளும் பெருமளவு பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக இங்குள்ள மக்கள் மத்தியில் எழுச்சியையும், கல்வி மேம்பாட்டினையும் ஏற்படுத்துவதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன் என்றார்.

sock.sport-59
இதனையடுத்து மேற்படி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியை செல்வி ஜெகநந்தினி முத்துக்குமார் அவர்கள் உரையாற்றும் போது,

“தாயகம் மாலை நேர கல்வி நிலையமானது மிகவும் சிறப்பாக செயற்படுவதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கல்வி கற்பதை மாத்திரமல்லாது கல்வியின் இணைப்பாடவிதான விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும். அந்த வகையில் இதுபோன்ற விளையாட்டுப் போட்டியினை மாணவர்களது மனவளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். எனவே இதுபோன்ற திறனாய்வுப் போட்டியினை நடாத்தியதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன்.

இதேவேளை இன்றைய பொதுக்கூட்டத்தில் நான் கல்வி சம்பந்தமாக மட்டுமல்ல மக்களுக்கு பொதுஅறிவினை ஊட்டும் வகையில் இங்கு சிறியதொரு நூலகமொன்றை அமைக்க வேண்டுமென்பது குறித்து உரையாற்றவே எண்ணியிருந்தேன். ஆயினும், நேற்றையதினம் இரவு தான் இணையதளத்தில் பார்க்கும் போது சுவிஸிலிருந்து திரு. திருமதி அருள்நாதன் பாலசுவர்ணா குடும்பத்தினர் இங்கு ஒரு பொது நூலகத்தை திறப்பதற்கான சகல உதவிகளையும் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருப்பதைக் கண்டு நான் மிகவும் சந்தோசமடைந்தேன்.

மேற்படி பொது நூலகத்தில் வெறுமனே கதைப் புத்தககங்களை மட்டும் வைக்காது, புங்குடுதீவிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு தேவையான பொது அறிவினை ஊட்டக்கூடியதும், அவர்கள் கல்வி முன்னேற்றத்திற்குப் பயன்படும் வகையிலுமான புத்தகங்களைப் பெற்று வைக்க வேண்டும்.

நான் யாழ். ஏழாலையை சேர்ந்தவராக இருந்த போதிலும் இங்கு ஆசிரியையாக கடமையாற்றி வரும் காலகட்டத்தில் புங்குடுதீவு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் சேவை செய்வதனை நினைத்து மனமகிழ்கின்றேன். அதேபோல் வெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களும், அவர்களின் ஒன்றியங்களும்; இங்குள்ள மக்களுக்கு உதவி புரிவதை பெரும்பாக்கியமாக கருதி செயல்படுவதை நான் கண்ணுற்றுள்ளேன். எமது றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கும் புங்குடுதீவு சுவிஸ், பிரான்ஸ் ஒன்றியத்தின் ஊடாக சில உதவிகள் புரிந்ததையும் நான் நன்றியுடன் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

அதேபோன்று இன்றைய விளையாட்டு விழாவானது ஓர் உத்தியோகபூர்வ பாடசாலையொன்றில் நடைபெறுவது போன்று “தாயகம்” தனியார் இலவச கல்வி நிலையத்தினால் இந்தளவுக்கு மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது என்பதை என்னால் நம்ம முடியாமல் இருக்கின்றது. இதற்காக உதவி புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என தெரிவித்தார்.

sock.sport-19e

sock.sport-19f

sock.sport-19g

 

About raj

Check Also

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *