Breaking News
Home / செய்திகள் / புங்குடுதீவு க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான, இலவசக் கல்விக் கருத்தரங்கு..!

புங்குடுதீவு க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான, இலவசக் கல்விக் கருத்தரங்கு..!

002
புங்குடுதீவு “தாயகம்” நிறுவன அனுசரணையில் “ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்” நடாத்தும், புங்குடுதீவு க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு..

வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் 15 மாவட்டங்களிலுள்ள கல்வி நிலையில் பின்தங்கிய தமிழ் மாணவர்களின் க.பொ.த சாதாரணதரப் (தரம் – 11) பெறுபேறுகளை முன்னேற்றும் முகமாக, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்; செப்டம்பர், ஒக்டோபர் மாத காலப்பகுதிகளில் இலவச கல்விக் கருத்தரங்கை கணித, விஞ்ஞான பாடங்களில் நடாத்த தீர்மானித்துள்ளனர்.

இதன் பிரகாரம், புங்குடுதீவில் க.பொ.த சாதாரண தர மாணவர்களான,…

புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் 41 மாணவ, மாணவிகள்;

புங்குடுதீவு ஸ்ரீ கணேஷ மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 24 மாணவ, மாணவிகள்;

புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 24 மாணவ, மாணவிகள்;

புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 26 மாணவ, மாணவிகள்;

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 28 மாணவிகள்;

உட்பட மொத்தமாக 143 க.பொ.த சாதாரணதர மாணவ மாணவிகளுக்கான இக்கருத்தரங்கு, புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலத்தில் எதிர்வரும் வியாழன், வெள்ளி (08,09 -10-2015) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

புங்குடுதீவில் நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” முழுமையான நிதி அனுசரணை வழங்கி ஆதரவு தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்…..
திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன்,
பிரதம போஷகர், “தாயகம் சமூக சேவை அகம்”
புங்குடுதீவு.

002

001

About raj

Check Also

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *