Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் அனுசரணையில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், இலவசக் கல்விக் கருத்தரங்கு..!! (முழுமையான படங்கள்)

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் அனுசரணையில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், இலவசக் கல்விக் கருத்தரங்கு..!! (முழுமையான படங்கள்)

001
புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் அனுசரணையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும், இலவசக் கல்விக் கருத்தரங்கு..!! (முழுமையான படங்கள்)

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் நேற்றையதினம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்விக் கருத்தரங்கானது இன்றையதினம் புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலயத்தில் காலை 9மணியளவில் ஆரம்பமாகியது.

மேற்படி இலவசக் கல்விக் கருத்தரங்கானது இன்றையதினமும் நாளையும் புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறுகின்றது. மேற்படி கருத்தரங்கில் புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலயம், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம், புங்குடுதீவு கமலாம்பிகை மகாவித்தியாலயம், புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலயம், புங்குடுதீவ சிவசுப்பிரமணியர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் உரையாற்றிய திரு. சிறீபவன் பாலச்சந்திரன் அவர்கள்,
தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவசக் கல்வி கருத்தரங்கு தொடர்பில் விளக்கிக் கூறினார். அத்துடன் “இன்றையதினம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விஞ்ஞான கற்கைநெறிக்கானதும் நாளையதினம் கணிதபாட கற்கைநெறிக்கானதுமான கருத்தரங்குகள் நடைபெறும் என்று கூறியதுடன், இந்தக் கருத்தரங்குகளுக்கும், இதில் பங்கேற்கின்ற மாணவ, மாணவியர்க்கான மதிய உணவிற்குமான அனுசரணையை வழங்கிய புங்குடுதீவு தாயகம் அமைப்பினருக்கும் குறிப்பாக அதன் பிரதம போசகர் திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

மேற்படி நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. குயின்ஸ்ரன், புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் மற்றும் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், புங்குடுதீவு தாயகம் அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுள் ஒருவருமாகிய திரு. எஸ்.கே சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூகசேவை அகத்தின் பிரதம போசகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு தாயகம் அமைப்பின் நிர்வாகக்குழு தலைவரும், தாயகம் அமைப்பின் சொக்கலிங்கம் அகடமி ஆசிரியைகளில் ஒருவருமாகிய திருமதி ரோசஸ் காஞ்சனா அவர்களும், மாணவ, மாணவிகளும் பங்கேற்றிருந்தனர்.

இங்கு உரையாற்றிய தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு குயின்ஸ்ரன் அவர்கள்,
“தாம் பல்கலைக்கழகத்தில் எந்தளவுக்கு கஸ்ரங்கள்பட்டு கல்வி கற்றோம் என்பதை உணர்ந்து, நீங்களும் அந்த கல்வியைக் கற்பதற்கான உதவிகளை செய்வதற்கு வந்துள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்கும், இதற்கான முழு நிதி அனுசரணையும், இந்த மாணவர்களுக்கு இரு நாட்களுக்கும் மதிய போசனத்தையும் வழங்கி ஆதரவு வழங்குகின்ற புங்குடுதீவு சமூக சேவை அகத்திற்கும் மாணவ, மாணவியராகிய நீங்கள் செய்யும் கைமாறு யாதெனில், கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுவது தான்.

ஏனெனில் அண்மைக்காலமாக புங்குடுதீவில் கல்வியில் கவனம் செலுத்தாத நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை இவ்வாரம் வெளிவந்த ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் மூலம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் புங்குடுதீவில் எவருமே சித்தி அடையாதது எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது. ஆகவே கல்வி கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென மாணவ, மாணவியராகிய உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதுடன், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்தி பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகின்றேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுள் ஒருவருமாகிய திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்கள், “ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களுக்கும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தின் பிரதம போசகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்கள்,
“மேற்படி கருத்தரங்கு பற்றி ஊவா வல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களால் தெரிவிக்கப்பட்டவுடன் இதனை தாயகம் நிறுவனத்தினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது இக்கருத்தரங்கினை நடத்துவதற்கு உடனடியாகவே தமது சம்மதத்தை தெரிவித்து முழுமையான நிதி உதவிகளையும் வழங்கிய அவர்களுக்கு மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய கைமாறு யாதெனில், கல்வியில் சிறந்து விளங்கி புங்குடுதீவினதும், புங்குடுதீவு மக்களினதும் நன்மதிப்பை மென்மேலும் உயர்த்த வேண்டும் என்பதே” என்றார்.

இதனைத் தொடர்ந்து தாயகம் சமூக சேவையகத்தின் பிரதம போசகர் திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்களினாலும், தாயகம் சமூக சேவையகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராகிய திரு. எஸ்.கே சண்முகலிங்கம் அவர்களினாலும் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி கருத்தரங்கானது நாளையதினமும் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

12077081_548911815259547_1509715964_n

12077247_548911878592874_26735093_n

12081349_548911745259554_1335075987_n

12081439_548911825259546_248140200_n

12084103_548911791926216_1616321437_n (1)

12084220_548911855259543_951558409_n

12086797_548911781926217_622154233_n

12092580_548911758592886_1478162094_n

12113038_427890000754808_596900340_o

12113051_427888037421671_1856011472_o

12116140_427888444088297_1109735305_o

12116420_427890134088128_1128953239_o

12119214_427890587421416_1759682164_o

12119259_427889924088149_1073036055_o

12119615_427890237421451_1143242706_o

12124310_427888284088313_1838090561_o

12162134_427888464088295_828685228_o

12162302_427889020754906_349891024_o

002

 

About raj

Check Also

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *